ரஜினி ப்ளட்ஸ்டோன் பட தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு!

|

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஆங்கிலப் படமான ப்ளட்ஸ்டோனைத் தயாரித்த அசோக் அமிர்தராஜின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை ஆளுநர் ரோசய்யா வெளியிட்டார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் லதா ரஜினிகாந்த்.

ஹாலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளராக விளங்குபவர் அசோக் அமிர்தராஜ். சென்னையைச் சேர்ந்த இவர் விம்பிள்டன் உள்ளிட்ட டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றவர்.

ரஜினி ப்ளட்ஸ்டோன் பட தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு!

பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகி சினிமா தயாரிப்பாளராகிவிட்டார். ஆங்கிலத்தில் ரஜினி நடித்த ‘பிளட்ஸ்டோன்', தமிழில் ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்' உட்பட 100 க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

அசோக் அமிர்தராஜ் தன் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதிய ஆங்கிலப் புத்தகம் ‘அட்வான்டேஜ் ஹாலிவுட்'.

இந்த சுயசரிதை நூலை, ஆளுநர் ரோசய்யா சென்னையில் சமீபத்தில் வெளியிட்டார். சென்னை அமெரிக்க தூதர் ஜெனிபர் மெக்கின்டயர் பெற்றுக் கொண்டார்.

ரஜினி ப்ளட்ஸ்டோன் பட தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு!

லதா ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், நடிகை சஞ்சிதா ஷெட்டி உட்பட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்று அசோக் அமிர்தராஜை வாழ்த்தினர்.

 

Post a Comment