நம்மள இப்படி காமெடி பீஸாக்கிடுச்சே இந்த நடிகை: குமுறும் நடிகர்

|

சென்னை: இளம் நாயகி ஒருவர் மீது இளம் நடிகர் கடுப்பில் உள்ளாராம்.

கேரளாவில் இருந்து வந்து அடுத்தடுத்து பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அந்த டைம் நடிகை. அவருக்கும் இரண்டு எழுத்து நாயகனுக்கும் லவ்வோ லவ் என்று செய்திகள் வந்தன.

ஆனால் நாயகன் வீசிய காதல் வலையில் நடிகை சிக்கவில்லையாம். எப்படியும் சிக்காமலா போய்விடும் என்று நினைத்து நடிகர் வலை வீசிக் கொண்டே இருக்கிறாராம். இந்த நாயகனும், நாயகியும் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தில் ஜோடி சேர இருந்தார்கள்.

அவர்களை ஜோடியாக போட்டு படம் எடுக்கு ஒரு இயக்குனர் முடிவு செய்தார். இதையடுத்து நாயகியை அணுகி கதையை கூறியுள்ளார். கதையை கேட்ட நாயகியோ இரண்டு எழுத்து நாயகன் இதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று பெரிய சேட்டன் நடிகர் ஒருவரின் மகன் பெயரை பரிந்துரைத்துள்ளார். விளைவு தற்போது அந்த நாயகியுடன் சேட்டன் நடிகரின் மகன் தான் ஜோடியாக நடிக்கிறார்.

இது குறித்து கேள்விப்பட்ட இரண்டு எழுத்து நாயகன் இந்த நடிகை இப்படி நம்மை காமெடி பீஸாக்கிவிட்டதே என்று குமுறுகிறாராம்.

 

Post a Comment