சென்னை: அரசியலில் அதிகம் ஆர்வம் உள்ளதாகவும், நல்ல அரசியல் கட்சியில் சேர விரும்புவதாகவும் நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
நடிகை நமீதா சமூக சேவையில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். கண்தானம், ரத்ததான முகாம் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் கண் தானம் செய்வதை வலியறுத்தி சென்னையில் நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
இது போன்ற சமூக சேவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நமீதா ஒரு பைசா கூட வாங்குவதில்லை. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நமீதாவை புகழந்து தள்ளுகிறார்கள். வெளிநாடுகளில் தெருவுக்கு தெரு பெண்கள் கழிப்பிடங்கள் இருப்பது போன்று நம் ஊரிலும் பெண்கள் கழிப்பிடங்கள் இருக்க வேண்டும் என்று நமீதா ஆசைப்படுகிறார்.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் ஒரு கழிப்பிடத்தை கட்டி திறந்தும் வைத்தார். தன்னார்வ தொண்டு அமைப்புகள் உதவி செய்தால் இதே போன்று சென்னை நகர தெருக்களில் பெண்களுக்கான கழிப்பிடங்கள் கட்ட அவர் திட்டமிட்டார். ஆனால் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
சமூக சேவை செய்கிறீர்களே அடுத்து அரசியலில் குதிப்பீர்களோ என்று கேட்டதற்கு, நமீதா கூறுகையில்,
எனக்கு அரசியலில் ஆர்வம் உள்ளது. நல்ல அரசியல் கட்சியில் சேர விரும்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். இல்லை எனில் தொடர்ந்து சமூக சேவை செய்வேன் என்றார்.
Post a Comment