சென்னை: சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போட்டியே இல்லாமல் சோலோவாக இன்று களமிறங்குகிறது.
இந்த ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப நல்ல ஆண்டு. அவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் இரண்டுமே வெற்றிப் படங்கள்.
இவற்றைத் தொடர்ந்து இன்று கேடிபில்லா கில்லாடி ரங்கா படத் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் இன்று வெளியாகிறது.
விஷாலின் மதகஜராஜா இன்று 800 தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், அந்தப் படம் தள்ளிப் போனதால் சோலோவாகக் களமிறங்குகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
படத்துக்கு ஏக விளம்பரம் என்பதால் பெரிய ஓபனிங் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
பூர்ணம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், சூரி, ஸ்ரீதேவிகா நடித்துள்ளனர். டி இமான் இசையில் ஏற்கெனவே பார்க்காதே, ஊதா கலரு ரிப்பன் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
இந்தப் படமும் ஜெயித்தால், இந்த ஆண்டு ஹாட்ரிக் நாயகன் பட்டியலில் சிவகார்த்திகேயன் இடம்பெறுவார்.
Post a Comment