ஜெயசித்ரா – ராதாரவி நடிக்கும் ‘ரெங்கவிலாஸ்’: ஜெயாடிவியில் புதிய தொடர்

|

ஜெயசித்ரா – ராதாரவி நடிக்கும் ‘ரெங்கவிலாஸ்’: ஜெயாடிவியில் புதிய தொடர்

ஜெயா டி.வியில் ஜெயசித்ரா, ராதாரவி, வடிவுக்கரசி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் ரெங்கவிலாஸ் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது.

‘சின்னத்திரையில் ஒரு சினிமா' என்ற அடைமொழியுடன் தொடரும் இந்த தொடரின் கதை ஸ்ரீரங்கத்தில் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தொடரின் படப்பிடிப்பும் ஸ்ரீரங்கத்திலேயே நடைபெறுகிறது.

‘ரெங்கவிலாஸ்' என்ற பெயரில் உள்ள அந்த பிரமாண்ட வீட்டில் வாழும் கூட்டுக்குடும்பம், அவர்களின் அனுதின ஆசாபாசங்கள் தொடரின் கதைக்களம்.

ரியல் எஸ்டேட் நடத்திவரும் ஒருவருக்கு அந்த வீடு கண்ணில் பட, தகிடுதத்தம் செய்து அந்த வீட்டை அபகரிக்க முயல்கிறார். முடிவு என்னாகிறது என்பது திருப்புமுனைகளுடன் கூடிய திரைக்களம்.

சின்னத்திரையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நட்சத்திரங்கள் நடிக்கும் தொடர் என்ற பெருமை ‘ரெங்கவிலாசுக்கு' கிடைத்திருக்கிறது.

டைரக்டர் மணிபாரதி இயக்கி வரும் இந்த தொடரில் ஜெயசித்ரா, ராதாரவி, வடிவுக்கரசி, டெல்லி குமார், பூவிலங்கு மோகன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

Post a Comment