சென்னை: விஷாலின் பாண்டிய நாடு படத்தின் இசை வெளியீடு முதல் முறையாக லயோலா கல்லூரியில் நடந்தது.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் பாண்டிய நாடு. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார் விஷால்.
லட்சுமி மேனன் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ஒற்றைப் பாடல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை லயோலா கல்லூரியில் நடந்தது.
ஒத்தக்கடை ஒத்தக்கடை என்று தொடங்கும் பாடலை லயோலா கல்லூரி முதல்வர் ஜோஸ் சுவாமிநாதன் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
கல்லூரியின் டீன் ஜான் பிரகாஷ், இயக்குநர் பிரான்சிஸ் சேவியர், அருட்தந்தை ஜெபமாலை ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பாண்டிய நாடு இயக்குநர் சுசீந்திரன், நடிகை லட்சுமி மேனன், நாயகன் விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment