சென்னை: ஐம்பது வயதானாலும் தான் எப்போதுமே ஹீரோயினாக நடிக்கவே விரும்புவதாகவும் கேரக்டரக் வேடங்களில் நடிப்பதை விரும்பவில்லை என்றும் ஸ்ரீதேவி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
திருமணத்துக்குப் பிறகு நீண்ட காலம் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, ‘இங்லீஷ் விங்லீஷ்‘ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் சுமாராகப் போனாலும், விமர்சகர்கள் ஓஹோவெனப் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
சமீபத்தில் ஜப்பானிலும் ரிலீசானது ‘இங்லீஷ் விங்லீஷ்'. அங்கும் நல்ல வரவேற்பாம்.
நம்ம மார்க்கெட் இப்பவும் ஸ்டெடியாகத்தான் இருக்கு... எனவே நடிக்கலாம் என முடிவு செய்துவிட்ட ஸ்ரீதேவி, இப்போதெல்லாம் எந்த விருந்தையும் விட்டுவைப்பதில்லை. பல சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பேஷன் ஷோக்களில் தவறாமல் கலந்து கொண்டு கவர்ச்சி உடைகளில் நடையாய் நடக்கிறார்.
ஆனாலும் அவருக்கு வரும் வேடங்கள் எல்லாம் அக்கா, அண்ணி அல்லது ஆன்ட்டி மாதிரிதான் உள்ளனவாம். கதை சொல்லும் போது, நீங்கதான் படத்தில் மெயின் கேரக்டர். ஆனால் ஹீரோ - ஹீரோயின் உண்டு என்று சொல்லி வெறுப்பேற்றுகிறார்களாம் இயக்குநர்கள்.
இந்த வேடங்களில் தன்னால் நடிக்க முடியாது என உறுதியாக மறுத்துவிட்டாராம் ஸ்ரீதேவி.
''ஐம்பது வயசானால் என்ன... எனக்கு அழகும், திறமையும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இனியும் ஹீரோயினாகத்தான் நடிப்பேன்.
குணச்சித்ர வேடங்களில் நடிக்கமாட்டேன். நான் ஹீரோயினாக நடிப்பதைப் பார்த்து ரசிக்க என் ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்," என்கிறார் ஸ்ரீதேவி கெத்தாக.
கிழவியத் தூக்கி மனையில வைய்யின்ன கதையால்ல இருக்கு...!
Post a Comment