அஞ்சலிக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

|

அஞ்சலிக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

சென்னை: நடிகை அஞ்சலிக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தனது சித்தி பாரதி தேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டி தலைமறைவாக இருந்தார் அஞ்சலி. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர் திரும்பி வந்தார். தற்போது ஹைதராபாத்திலேயே இருந்து வருகிறார். அவரும் அவரது சித்தியும் சமசரமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அஞ்சலி தன் மீது கூறியபுகார் அவதூறானது என்றும், பொயயான புகாரைக் கூறிய அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்று கோரி இயக்குநர் களஞ்சியம் சார்பில் சைதாப்பேட்டை பெருநகர 177வது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு அஞ்சலி வரவில்லை. இதையடுத்து கடந்த 12ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது அஞ்சலிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார் மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி.

இதையடுத்து அஞ்சலியின் வழக்கறிஞர் முருகன் ஒரு மனு செய்தார். அதில், அஞ்தசலி சினிமா சூட்டிங்கில் இருப்பதால் அவர் மீதான வாரண்டை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இதை ஏற்ற மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி பிடிவாரண்ட்டை ரத்து செய்தார். மேலும், வழக்கின் விசாரணையையும் அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.

 

Post a Comment