மும்பை: நடிகர் சல்மான் கான் தனது ரசிகர் ஒருவர் அனுமதியின்றி தன்னை புகைப்படம் எடுத்ததால் அவரின் செல்போனை வாங்கி தூக்கி எறிந்துவிட்டார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் சர்ச்சைகளின் செல்லப் பிள்ளை ஆவார். தற்போது தனது கோபத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பழம்பெரும் நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க சல்மான் கான் நேற்று மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்த அவர் காரில் இருந்து இறங்க விரும்பவில்லை.
அப்படியே காரில் கிளம்புகையில் அங்கு நின்று கொண்டிருந்த ரசிகர் ஒருவர் அனுமதியின்றி சல்மானை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான் கார் ஜன்னலின் கண்ணாடியை திறந்து அந்த ரசிகரிடம் அவரது செல்போனை கேட்டுள்ளார். அவர் கொடுத்தவுடன் அந்த செல்போனை தூக்கி எறிந்துவிட்டார்.
இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சல்மான் செய்தது சரியில்லை என்று அந்த ரசிகர் தெரிவித்தார்.
Post a Comment