சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்தின் மூலம் 2012 ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வான வான்யா மிஷ்ராவை அறிமுகம் செய்கிறார்.
ரஜினி, கமல் ஆகியோருக்கு மாஸ் திரைப்படங்களை கொடுத்தவர் சுரேஷ்கிருஷ்ணா. கடந்த 27 வருடங்களில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
‘சத்யா', ‘இந்திரன் சந்திரன்', ‘அண்ணாமலை', ‘வீரா', ‘பாட்ஷா', தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூன், மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான் உள்ளிட்ட சூப்பர் மற்றும் மெகா ஸ்டார்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது சுரேஷ் கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் புதிய படக்கம்பெனியை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றை தயாரித்து, இயக்கவிருக்கிறார்.
காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தில் நாயகனாக பிரின்ஸ் மற்றும் நாயகியாக ‘2012 மிஸ் இந்தியா' வான்யா மிஷ்ரா ஆகியோர் அறிமுகமாகின்றனர். இதற்கான போட்டோ சூட்டிங் சென்னையில் முடிந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.
Post a Comment