தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பம் ரிலீஸ்: தயாரிப்பாளர் அறிவிப்பு

|

சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படம் சோலோவாக இல்லையாம் மாறாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்று படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பம் ரிலீஸ்: தயாரிப்பாளர் அறிவிப்பு

'ஆரம்பம்' அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும். ‘ஆரம்பம்' படத்தின் இசை வெளியீடு குறித்து செய்தி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆரம்பம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்றும், அதன் பிறகு சோலோவாக ரிலீஸ் ஆகும் என்றும் பேச்சு அடிபட்டது. தீபாவளி அஜீத் குமாருக்கு ராசியான பண்டிகை என்று தான் கூற வேண்டும். முன்பு தீபாவளி அன்று ரிலீஸ் ஆன அவரது படங்கள் ஹிட்டாகின. இந்நிலையில் தான் ஆரம்பம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

தீபாவளி... தல தீபாவளி...

 

+ comments + 1 comments

4 September 2013 at 06:32

தீபாவளிக்கு ஹிட்டாகின படங்கள் enna nu sollunga

Post a Comment