சென்னை: தீபாவளி ரேஸ் கிட்டத்தட்ட ஆரம்பமாகிவிட்டது. தியேட்டர் பிடிப்பதில் தயாரிப்பாளர்கள் முட்டி மோதியதில் 700 அரங்குகள் வரை கிடைத்திருக்கின்றன புதுப்படங்களுக்கு.
வரும் நவம்பர் 2-ம் தேதி தீபாவளிப் பண்டிகை. தமிழ் சினிமாவின் முக்கியமான பாக்ஸ் ஆபீஸ் சீசன்களுள் ஒன்று தீபாவளி.
முன்பு மாதிரி நூறு தியேட்டர்களில் படம் வெளியானால் போதும் என்ற நிலை இப்போது இல்லை. முடிந்தவரை அதிக அரங்குகளில் திரையிட்டு முதல் வாரத்திலேயே வசூலை எடுக்கப் பார்ப்பதால், ஒவ்வொரு படத்துக்கும் அதிக அரங்குகள் தேவைப்படுகின்றன.
இந்த தீபாவளிக்கு அஜீத் நடித்த ஆரம்பம், கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மூன்று படங்களுக்கும் குறைந்தது 900 அரங்குகள் தேவைப்படுகின்றனவாம்.
ஆனால் இதுவரை முட்டி மோதியதில் 700 அரங்குகள்தான் கிடைக்கும் என்ற நிலை. அஜீத் படத்துக்கு மட்டும் குறைந்தது 400 அரங்குகள் வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறார்களாம்.
கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு 350 தியேட்டர்கள் கண்டிப்பாக வேண்டும் என பிடிவாதமாக உள்ளார்களாம். இதில் இரண்டாம் உலகத்துக்கு எப்படி தியேட்டர்கள் தருவது என குழப்பத்தில் உள்ளார்களாம் தியேட்டர்காரர்கள்.
இதனால் இரண்டு படங்கள் மட்டுமே தீபாவளிக்கு ரிலீசாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Post a Comment