சென்னை: இன்சியல் இயக்குநரின் தயாரிப்பில் உருவாகி வரும் சரித்திரப் படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. படத்தின் இயக்குநர் பிரம்மாண்டத்திற்குப் பெயர் போன இயக்குநரின் சிஷ்யர். அந்த மரியாதையில் தனது குருநாதரை அழைக்கப் போக, அவரோ ஒரேயடியாக மறுத்து விட்டாராம். காரணம், இன்சியலுக்கும் பிரம்மாண்டத்துக்கும் இடையில் புகையும் நெருப்பு தானாம்.
இது ஒருபுறம் இருக்க, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு படத்தின் இருநாயகிகளும் மிஸ்ஸிங். ஒருவர் வேறொரு பட வேலையில் பிசியோ பிசி. ஆனால், மற்றொரு நம்பர் நடிகையோ மன உளைச்சலால் தான் பங்கேற்கவில்லையாம்.
இன்சியல் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விழாவில் கலந்து கொள்ள மறுத்து விட்டாராம் நடிகை. தொடர்ந்து உண்டான காதல் வலிகளே இன்னும் ஆறா வடுக்களாக இருக்க, இப்போது புதிய வலியாக இப்படத்தின் நாயகனோடு உண்டான கிசுகிசுவும் தான் நடிகையின் ஆப்செண்டுக்குக் காரணமாம்.
விரைவில் ரகசிய திருமணம், அதுவும் ஐதராபாத்தில் என இடம், காலம் குறித்து வதந்திகள் பரவுகிறதாம். படத்தின் புரோமோஷனுக்காக படக் குழுவினரும் சில வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியதும் நடிகையின் மன வருத்தத்திற்கு பிண்ணனியில் உள்ளதாம்.
Post a Comment