சென்னை: நடிகர் சங்கத்திலிருந்து என்னை நீக்கியது செல்லாது. நான் சங்கத்தின் பொதுக்குழுவில் பங்கேற்றுப் பேசத்தான் போகிறேன் என்று நடிகர் குமரி முத்து கூறினார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியதாக சங்கத்தில் இருந்து குமரிமுத்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.
இதனால் வருகிற 18-ந்தேதி சென்னையில் நடக்க உள்ள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் குமரிமுத்து பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே நடிகர் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து குமரிமுத்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
13-வது விதியின் கீழ் நடிகர் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு குறித்து குமரிமுத்து கூறும்போது, 18-ந்தேதி நடைபெறும் நடிகர் சங்கத்தின் பொதுக் குழுவில் நான் கலந்து கொண்டு விளக்கம் அளிக்க அனுமதி அளித்துள்ளனர். எனவே பொதுக்குழுவில் பங்கேற்று பேசத்தான் போகிறேன். என்னை யாரும் தடுக்க முடியாது," என்றார்.
Post a Comment