சென்னை: பவர் ஸ்டாரை வைத்து படம் எடுப்பதற்கு பதில் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ரெண்டாவது படம் இயக்குனர் சி.எஸ். அமுதன் தெரிவித்துள்ளார்.
மிர்ச்சி சிவாவை வைத்து தமிழ்ப் படம் எடுத்து தமிழ்நாட்டையே கலக்கியவர் இயக்குனர் சி.எஸ். அமுதன். அவர் தற்போது விமல், ரம்யா நம்பீசன், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ் ஆகியோரை வைத்து காமெடி படம் ஒன்றை எடுத்து வருகிறார். இது அமுதனின் இரண்டாவது படம் என்பதால் படத்தின் தலைப்பையும் ரெண்டாவது படம் என்றே வைத்துவிட்டார்.
இந்நிலையில் அமுதனிடம் ஒரு முன்னணி பத்திரிக்கை ஒன்று பவர் ஸ்டாரைப் பற்றி ஒரு கேள்வி கேட்டுள்ளது. அதாவது, பவர் ஸ்டார் உங்களை கடத்திச் சென்று வைத்துக் கொண்டு தன்னை வைத்து படம் எடுக்குமாறு மிரட்டினால் என்ன செய்வீர்கள் என்று அமுதனிடம் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர், வேறு வழியே இல்லை, தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment