சென்னை: இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா குறித்த செய்தி சேகரிக்க ஜெயா டிவியைத் தவிர மற்ற தொலைக்காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.
சென்னையில் இன்று மாலை தொடங்கும் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இணைந்து நடத்தும் இந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும், தமிழ்நாடு உள்பட நான்கு மாநில திரைப்பட கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், திரைப்பட விழா குறித்த செய்தி சேரிக்க ஆளும் கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சியை தவிர மற்ற தொலைக்காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவுக்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதனால் ஒளிபரப்பு செய்ய குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், விழாவில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றும் செய்தியை சேரிக்கவும் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
+ comments + 2 comments
dictatorship
SUNTV
VIJAY TV
KALIGNAR TV
LAST ONLY IS jAYA TV
ONLY PARTY PROPLE SHOULD ENJOY
7% will ignore
it is not freedom of press
Mean act
Post a Comment