குட்டைப் பாவாடை அணியச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள்! - நடிகை மதுபாலா

|

குட்டைப் பாவாடை அணியச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள்! - நடிகை மதுபாலா

சென்னை: தான் முன்பு பரபரப்பாக நடித்த காலத்தில் குட்டைப் பாவாடை அணியச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு ஒப்புக் கொள்ளாததால் எனக்கு பல வாய்ப்புகள் பறிபோயின, என நடிகை மதுபாலா தெரிவித்துள்ளார்.

தொன்னூறுகளில் ரோஜா, ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி போன்ற படங்களில் நடித்தவர் மதுபாலா. பாலச்சந்தரின் அழகன் படத்திலும் நடித்துள்ளார்.

திருமணமாகி கணவர், இரு பெண் குழந்தைகள் என செட்டிலான மதுபாலா, மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தனது மறுபிரவேசம் குறித்து அவர் கூறுகையில், "நடிகையாக இருந்தபோது ரொம்ப கஷ்டப்பட்டேன். குட்டைப் பாவாடை, நீச்சல் உடை அணியச் சொல்லி இயக்குனர்கள் பலர் நிர்ப்பந்தித்தனர். என் உடம்பு வாகுக்கு அது சரிப்படாது என்று மறுத்தேன்.

இதனால் நிறைய படவாய்ப்புகளை இழந்தேன். இயக்குநர்கள் பாலச்சந்தர், மணிரத்னம் போன்றோர்தான் என்னை புரிந்து கொண்டு என் உடம்புக்கு ஏற்ற ஆடைகளை அணியச் செய்தனர்.

காதல் திருமணம் செய்து கொண்டேன். இருமகள்கள் உள்ளனர். அவர்களும் வளர்ந்துவிட்டனர். எனவே நடிக்க வந்துள்ளேன். தமிழ் படத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்," என்றார்.

 

Post a Comment