நம்பர் ஒன்னாக இருந்துவிட்டு ஜாகையை மாற்றியதால் அல்லாடும் நடிகை

|

மும்பை: டோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஒருவர் பாலிவுட் சென்று அல்லாடிக் கொண்டிருக்கிறாராம்.

டோலிவுட்டில் ஒரு நடிகை கொடிகட்டிப் பறந்தார். இஞ்சி இடுப்பழகியான அவர் கோலிவுட்டிலும் தலையைக் காட்டியுள்ளார். இளைய தளபதியுடன் அவர் நடித்த படம் ஹிட்டானது. அவரது கால்களில் கோடிகளை கொட்ட டோலிவுட் தயாரிப்பாளர்கள் ரெடியாக இருந்தனர். கோடிகளை கொட்டியும் வந்தனர்.

இந்நிலையில் அம்மணிக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவ்வளவு தான் நான் பாலிவுட் போகிறேன், அங்கேயே செட்டிலாகப் போகிறேன் என்று ஹைதராபாத்தில் இருந்து மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார். அவர் நடித்த முதல் படம் ஹிட் என்றாலும் அதன் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை.

ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தான் வருகின்றன. பாலிவுட்டில் பெரிய ஆளாகிவிடலாம் என்று சென்றவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க அல்லாடிக் கொண்டிருக்கிறாராம்.

டோலிவுட்டில் அவரை தலையில் வைத்து கொண்டாடினர். இப்போது பாலிவுட்டில் திண்டாடிக் கொண்டிருக்கிறார் அம்மணி.

 

Post a Comment