பரோலை மேலும் 2 வாரம் நீட்டியுங்கள் - சஞ்சய் தத் மனு

|

பரோலை மேலும் 2 வாரம் நீட்டியுங்கள் - சஞ்சய் தத் மனு

மும்பை: தனது பரோலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என நடிகர் சஞ்சய் தத் மனு தாக்கல் செய்துள்ளார்.

1993-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சஞ்சய்தத் ஏற்கனவே 18 மாதம் ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டதால், மீதியுள்ள 42 மாத கால தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.

முதலில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்த அவர் பின்னர் பாதுகாப்பு கருதி புனே ஏர்வாடா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக பரோலில் விடுவிக்க கோரி சஞ்சய்தத் கடந்த 1-ந் தேதி மனு செய்தார்.

இதை தொடர்ந்து அவர் 14 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது பரோல் இன்றுடன் முடிந்தது. இந்த நிலையில் பரோலை மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க கோரி சஞ்சய்தத் மனுதாக்கல் செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக நீட்டிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

 

Post a Comment