டிஸ்கோ சாந்தியின் கணவர் நடிகர் ஸ்ரீஹரி மரணம்

|

டிஸ்கோ சாந்தியின் கணவர் நடிகர் ஸ்ரீஹரி மரணம்

மும்பை: முன்னாள் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவரும், தெலுங்கு நடிகருமான ஸ்ரீஹரி கல்லீரல் பிரச்சனையால் இன்று மரணம் அடைந்தார்.

டிஸ்கோ சாந்தி தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை (49) மணந்தார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்கவில்லை. ஸ்ரீஹரி தெலுங்கு பட உலகில் பிரபலமான நடிகர். அவர் பிரபுதேவா இயக்கத்தில் ஆர்...ராஜ்குமார் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இதையடுத்து அவர் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை சென்றார். இந்நிலையில் கல்லீரல் பிரச்சனையால் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தாருக்கு திரையுலகினர் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீஹரி, டிஸ்கோ சாந்தி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மகள் அக்ஷரா பிறந்த 4 மாத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து மகளின் நினைவில் அக்ஷரா பவுன்டேஷனை ஹரி துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment