சென்னை: புதுமுக லீ இயக்குனர் தனது படத்திற்கு விளம்பரம் தேடிய ரகசியத்தை பார்ட்டிகள் தோறும் பெருமையாகக் கூறி வருகிறாராம்.
லீ இயக்குனர் எடுத்த அந்த 4 எழுத்து படத்திற்கு விளம்பரத்திற்கு ஒன்றும் குறைச்சலே இல்லை என்று தான் கூற வேண்டும். நிஜத்தில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் நம்பர் நடிகையும், நக்கல்ஸ் நாயகனும் படத்தில் கணவன், மனைவியாக நடித்தனர். படம் ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
முன்னதாக படத்தை விளம்பரப்படுத்த அதில் வரும் திருமணப் பத்திரிக்கையை வெளியிட்டனர். மேலும் இந்த படத்தில் நடிக்கையில் டைம் நடிகைக்கும், 2 எழுத்து நாயகனுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது என்றெல்லாம் செய்திகள் வந்தன. இத்தனை கிசுகிசுக்களையும் பரப்பிவிட்டு கம்மென்று இருந்தது வேறு யாருமல்ல லீயே தான்.
படத்திற்கு விளம்பரம் தேட நம்பர் நடிகைக்கும், நக்கல்ஸ் நாயகனுக்கும் காதல், டைம் நடிகைக்கும், 2 எழுத்து நாயகனுக்கும் இடையே காதல் என்று நான் கொளுத்திப் போட்டேன். இந்த அப்பாவி மீடியாக்காரங்களும் அதை உண்மை என்று நினைத்து கண்டமேனிக்கு விளம்பரம் கொடுத்துவிட்டார்கள் என்று எந்த பார்ட்டிக்கு சென்றாலும் லீ பெருமை அடிக்கிறராாம்.
நீங்க எல்லாம் நல்லா வருவீங்க.
Post a Comment