சென்னை: நடிகர் பிரபுவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக்கழகம்.
சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தில் உள்ளது இந்த வேல்ஸ் பல்கலைக்கழகம். இதன் 4-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில்தான் இந்த விருது வழங்கப்பட்டது.
விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார். துணைவேந்தர் கே.சேகர் வரவேற்றார். இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி துறை செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக இயக்குநருமான டாக்டர் விஸ்வமோகன் கட்டோச் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் நடிகர் பிரபு, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொது செயலாளர் கே.முருகன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வேந்தர் ஐசரிகணேஷ் வழங்கினார்.
விழாவில் 1,600 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
Post a Comment