வாய் வாய் என்னவாய்... என ஒரு வசனம் வரும் கவுண்டமணி நடித்த கோயில் காளை படத்தில்.
இப்போது உச்சத்திலிருப்பதாக சொல்லப்படும் இளம் காமெடி நடிகரின் நிலையை, மேலே சொன்ன தலைப்பை வைத்துதான் கமெண்ட் அடிக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.
சினிமா எப்போது இழுத்தணைக்கும் எப்போது எட்டி உதைக்கும் என்பது புரியாத ஒன்று.
காமெடியனின் நிலை அப்படித்தான் ஆகிவிட்டது. அவர் இல்லாவிட்டால் நடிக்கவே மாட்டேன் என்று சொன்ன ஹீரோக்களே தடுமாறும் அளவுக்கு வந்துவிட்டார்களாம், காமெடியனுக்கு எதிரான நிலையைப் பார்த்து.
படத்துக்குப் படம் காமெடி என்ற பெயரில் பல சீரியஸான விஷயங்களை இவர் கலாய்ப்பது ஒரு பக்கம் என்றால்... உலக நாயகன் போன்ற முன்னணி ஹீரோக்களையும் அவர்களின் படங்களையும்கூட கலாய்ப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டி வருகிறார்கள்.
முன்பு திரைமறைவில் வெளியாகி வந்த இந்த அதிருப்தி, இப்போது விழா மேடைகளிலேயே வெடிக்க ஆரம்பித்துள்ளது.
இன்னொரு பக்கம், காமெடி கிங்கும் வைகைப் புயலும் அதிரடிப் பாய்ச்சலில் களமிறங்கியுள்ளதால், பெரிய இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் மீண்டும் அந்த இரு ஜாம்பவான்களையும் நாட ஆரம்பித்துள்ளார்களாம்.
போகிற போக்கில் சொந்த செலவில் சூனியம்-ங்கிற வசனம் நமக்கே ஒர்க் அவுட் ஆகிடும் போலிருக்கே என கவலையில் இருக்கிறாராம் காமெடி.
குறிப்பு: நோர் என்றால் தெலுங்கில் வாய் என்று அர்த்தம்!
Post a Comment