ஹைதராபாத்: நடிகர் டாக்டர் ராஜசேகர் மனைவியும் நடிகையுமான ஜீவிதாவுக்கு செக் மோசடி வழக்கில் பிடி ஆணை பிறப்பித்துள்ளது ஹைதராபாத் நீதிமன்றம்.
நடிகை ஜீவிதா, பரந்தாமரெட்டி என்பவரிடம் ரூ.34 லட்சம் கடனாக வாங்கினார். 3 மாதங்களில் திருப்பிக் கொடுப்பதாக கூறிய ஜீவிதா, சொன்னபடி பணத்தைக் கொடுக்கவில்லை.
அவர் ஏற்கனவே கொடுத்த 'செக்'கை பரந்தாமரெட்டி வங்கியில் போட்டபோது, அது பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. இதனால் பரந்தாமரெட்டி ஜூபிலி ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் 2 முறை நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியும் ஜீவிதா கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதனால் ஜீவிதாவுக்கு நேற்று ஐதராபாத் கோர்ட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்தது. நடிகை ஜீவிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஜூபிலி ஹில்ஸ் போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Post a Comment