ஆனாலும் இந்தப் பொண்ணுக்கு இவ்வளவு...இவ்வளவு அடம் ஆகாதுய்யா என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் கதிரேசனும் இயக்குநர் சற்குணமும்.,
அந்தப் பொண்ணு... யெஸ்.. நஸ்ரியாவேதான்.
தன் அனுமதியில்லாமல் வேறு பெண்ணின் தொப்புளையும் தன் தலையையும் ஒட்ட வைத்து கவர்ச்சியாகக் காட்டி விட்டார்கள் என்பது நஸ்ரியாவின் புகார்.
இந்தப் புகாரை விசாரித்த நடிகர் சங்கம், 'சரி... ஆனது ஆச்சு... அதான் அந்த தொப்புள் உங்களுடையதில்லை என மீடியாவில் பிரபலமாயிடுச்சில்ல.. மேட்டரை இதோட விட்டுட்டு, அடுத்த வேலையைப் பாருங்க,' என்று சமாதானம் செய்தார்களாம்.
ஆனால் நஸ்ரியா அதை விடுவதாகவே இல்லை.
"இது மிகப் பெரிய தவறு. நான்தான் ஆரம்பத்திலிருந்தே இந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மறுத்து வருகிறேனே. இருந்தும் இப்படிச் செய்திருப்பது மோசடிதானே. புது பெண்தானே... என்ன செய்துவிடப் போகிறாள் என்ற நினைப்பில் இதுபோல செய்திருக்கிறார்கள். எந்த சமாதானத்துக்கும் நான் தயாராக இல்லை. அந்தக் காட்சியை நீக்கியே தீர வேண்டும்," என பிடிவாதமாகக் கூறிவிட்டாராம் நஸ்ரியா.
இதைக் கேட்டுத்தான், அப்படிக் கமெண்ட் அடித்தார்களாம் தயாரிப்பாளரும் இயக்குநரும்.
Post a Comment