'ராஜா ராணி' பார்க்க மனைவியுடன் கேரளா சென்ற ஸ்டாலின்

|

திருவனந்தபுரம்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் திருவனந்தபுரத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ராஜா ராணி படம் பார்த்துள்ளார்.

புதுமுக இயக்குனர் அட்லீ ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்டோரை வைத்து எடுத்த படம் ராஜா ராணி. படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆனது.

'ராஜா ராணி' பார்க்க மனைவியுடன் கேரளா சென்ற ஸ்டாலின்

படத்தை பார்த்தவர்கள் இயக்குனர் கதை சொன்ன விதம் வித்தியாசமாக இருந்தாலும் படத்தை பார்க்கையில் அதுவும் குறிப்பாக ஜெய்யின் கதாபாத்திரத்தை பார்க்கையில் மௌன ராகம் கார்த்திக் நினைவுக்கு வருகிறார் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம் சென்று அங்குள்ள கைராலி தியேட்டரில் ராஜா ராணி படத்தை பார்த்துள்ளார்.

ஸ்டாலின் தியேட்டரில் இருந்து வெளியே வந்ததை பார்த்த செய்தியாளர்கள், தமிழ் படத்தை பார்க்க நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவரோ, படம் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment