சென்னை: பட விழாக்களில் ஹீரோயின்கள் கலந்து கொள்ளாமல் தடுப்பது அவர்களின் மேனேஜர்கள்தான், என்று குற்றம்சாட்டினார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
முன்னணி தயாரிப்பாளரும் நடிகர் சங்க கவுரவ பொதுச் செயலாளருமான ஞானவேல்ராஜா நேற்று கோலாகலம் பட இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், "இந்த கோலாகலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு எவ்வளவோ கூப்பிட்டும் சரண்யா மோகன் வரவில்லை என்று தயாரிப்பாளர் என்னிடமும் சொன்னார். இது மிகப் பெரய தவறு. படவிழாக்களுக்கு நடிகைகள் கண்டிப்பாக வரவேண்டும்.
நான் தயாரித்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அதில் நடித்த கதாநாயகி காஜல் அகர்வாலை அழைத்தோம். அவர் வரவில்லை. அந்த நடிகையின் மானேஜர் விழாவுக்கு வரவிடாமல் தடுத்து விட்டாராம். மானேஜர் அனுமதிக்காததால் நடிகை வரவில்லை. நான் அந்த மேனேஜரிடம் கேட்டபோது, விளம்பரங்களில் பங்கேற்பது நடிகைகளின் வேலையில்லை என்று கூறிவிட்டார்.
படங்களின் ரிலீசுக்கு விளம்பரங்கள் முக்கியம். இது போன்ற விழாக்களில் நடிகைகள் பங்கேற்றால்தான் படம் மக்களை சென்று அடையும்.
இது நம் படம். ரசிகர்களிடம் கொண்டு போகும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்ற உணர்வு நடிகைகளுக்கு வரவேண்டும்," என்றார்.
+ comments + 1 comments
gnanavelraja is an useless fellow.
Post a Comment