ஜீ தமிழ் சேனலின் ‘தூள்’ காமெடி ஷோ

|

ஜீ தமிழின் புதிய படைப்பு ‘‘தூள்'' நிகழ்ச்சி. இது நகைச்சுவை கலைஞர்கள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகும்.

இதில் 5 அணிகளாக நகைச்சுவை கலைஞர்கள் பங்கேற்று, தங்களின் திறமையால் நேயர்களை சிரிக்க வைக்கின்றனர்.

‘‘லக்கா கிக்கா'' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் கால்பதித்த நடிகை ரோஜா, நடிகர் மற்றும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா ஆகியோர் தூள் நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.

ஜீ தமிழ் சேனலின் ‘தூள்’ காமெடி ஷோ

திறமை அடிப்படையில் 5 அணிகளில் சிறந்த அணியை தேர்வு செய்து அறிவிக்கும் பொறுப்பேற்றுள்ள இந்த நடுவர்கள், தங்களின் கலகலப்பான அணுகுமுறையில் நிகழ்ச்சியை மேலும் கலகலப்பூட்டி பங்கேற்பாளர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்துகின்றனர்.

சினிமாவில் பிரபலமாக உள்ள காமெடி ஜாம்பவான்களும் ‘‘தூள்'' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது சிறப்பம்சம். இவர்களும் நகைச்சுவை கலைஞர்களுடன் இணைந்து சிரிக்க வைக்கின்றனர்.

காமெடியை கருப்பொருளாக கொண்ட இந்நிகழ்ச்சி, ஜீ தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

 

Post a Comment