பிரபுதேவாவின் ஷூட்டிங்கிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த 'சிறுத்தை'

|

பிரபுதேவாவின் ஷூட்டிங்கிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த 'சிறுத்தை'

மும்பை: பிரபுதேவா இயக்கி வரும் இந்தி படமான ஆர்...ராஜ்குமாரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சிறுத்தை புலி ஒன்று வந்து சென்றுள்ளது.

பிரபுதேவா ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோரை வைத்து ஆர்...ராஜ்குமார் என்ற படத்தை இயக்கி வருகிறார். மும்பையில் உள்ள பிலிம் சிட்டி அருகே இருக்கும் ஏரியில் முக்கிய காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.

அந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது திடீர் என்று சிறுத்தை புலி ஒன்று அங்கு வந்துள்ளது (நம்ம கார்த்தி இல்ல). இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மற்றும் பாதுகாவலர்கள் டம்மி துப்பாக்கிகள், காலி பாட்டில்களைக் கொண்டு சத்தம் எழுப்பி சிறுத்தையை பீதி அடைய வைத்து அதை அங்கிருந்து கிளம்ப வைத்துள்ளனர்.

அதன் பிறகு ஷூட்டிங் தொடர்ந்து பல மணிநேரம் நடந்துள்ளது.

 

Post a Comment