ஆரம்பம் படத்துக்கு நான் தயாரிப்பாளரே இல்லீங்க! - ஏஎம் ரத்னம் தடாலடி

|

ஆரம்பம் படத்துக்கு நான் தயாரிப்பாளரே இல்லீங்க! - ஏஎம் ரத்னம் தடாலடி

சென்னை: அஜீத் நடித்து தீபாவளிக்கு வரவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆரம்பம் படத்துக்கு நான் தயாரிப்பாளரே அல்ல, என்று தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அறிவித்துள்ளார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்துக்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தன்னிடம் ரூ 1.50 கோடியை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கி கேடி படத்தை தயாரித்தாகவும், அந்த பாக்கியை இன்னும் திருப்பித் தராததால், வட்டியும் முதலுமாக சேர்ந்து ரூ 4.60 கோடி யாகிவிட்டதாகவும் அதைத் தராமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் ஏஎம் ரத்னத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதிலளித்துள்ள ஏ.எம்.ரத்னமோ, "இந்த படத்தின் தயாரிப்பாளார் நான் இல்லை. ஏ.ரகுராம் என்பவர்தான் சத்ய சாய் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கிறார். தயாரிப்பில் எனக்கு தொடர்பில்லை," என்றும் பதில் அளித்துள்ளார்.

 

Post a Comment