புல்லுக்கட்டு முத்தம்மா பட நாயகி பிரபல மலையாள நடிகர் மீது கமிஷனரிடம் புகார்!

|

சென்னை: சமீபத்தில் வெளியான புல்லுக்கட்டு முத்தம்மா என்ற படத்தின் நாயகியாக நடித்த மினு குரியன் பிரபல மலையாள நடிகர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்துள்ளார்.

நடிகை மினு குரியன், சென்னை நெற்குன்றம், பெருமாள் கோவில் தெருவில் வசிக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம், நேரில் நேரில் கொடுத்த புகார் மனு:

எனது கார் டிரைவர் என்னை ஏமாற்றி, ரூ.6 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்து விட்டார். தற்போது அந்த கார் டிரைவர், பிரபல மலையாள நடிகர் ஒருவரிடம் வேலைபார்க்கிறார்.

புல்லுக்கட்டு முத்தம்மா பட நாயகி பிரபல மலையாள நடிகர் மீது கமிஷனரிடம் புகார்!

பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அந்த நடிகர் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோயம்பேடு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உடனடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்பேடு போலீசாரும், உடனடி விசாரணையை தொடங்கி விட்டனர்.

மினு குரியன் பேட்டி:

மனு கொடுத்து விட்டு வெளியில் வந்த நடிகை மினு குரியன், நிருபர்களிடம் கூறுகையில், "நான் மலையாளத்தில் 16 படங்களிலும், தமிழில் 4 படங்களிலும் நடித்துள்ளேன். என்னிடம் கார் டிரைவராக இருந்த எனது ஊர்க்காரர் இப்போது, பிரபல மலையாள நடிகரிடம் வேலைபார்க்கிறார். நான் அவருக்கு ரூ.6 லட்சம் பணம் கொடுத்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.

அவருக்கு ஆதரவாக, என்னுடன் மலையாள படத்தில் நடித்துள்ள, பிரபல நடிகர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசினார். என்னை விபசார வழக்கில் மாட்டி விடுவேன் என்றும் மிரட்டுகிறார். என்னை கடத்திச்சென்று விடுவோம் என்றும் பயமுறுத்துகிறார்கள்.

ரூ.6 லட்சத்தை திருப்பி தர முடியாது என்றும் சொல்கிறார்கள்.

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், எனது புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்," என்றார்.

 

Post a Comment