அனிருத் இசை உங்களுக்குப் பறக்கும் உணர்வைத் தரும் - செல்வராகவன்

|

அனிருத் இசை உங்களுக்குப் பறக்கும் உணர்வைத் தரும் - செல்வராகவன்

இரண்டாம் உலகம் படத்துக்கு அனிருத் அமைக்கும் இசை உங்களுக்குப் பறக்கும் உணர்வைத் தரும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

தீபாவளி ஸ்பெஷலாக வரும் இரண்டாம் உலகம் படத்துக்கு முதலில் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்தார். செல்வராகவனுடன் அவர் இணைந்த முதல் படம் இது.

ஆடியோ ரிலீஸ் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், திடீரென்று படத்தின் இசையமைப்புப் பணிகளிலிருந்து கழன்று கொண்டார் ஹாரிஸ் ஜெயராஜ்.

இதையொட்டி படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் இதர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்தான் படத்துக்கு பின்னணி இசை அமைப்பதில் இருந்து திடீரென பின்வாங்கி இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

தற்போது ஹாரிஸுக்கு பதில் அனிருத் பின்னணி இசையை கவனிக்கிறார்.

இப்படத்தின் பின்னணி இசையை ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் வைத்து அமைக்க, இயக்குனர் செல்வராகவனும் அனிருத்தும் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு பேன்டஸி உலகில் நடக்கும் கதை என்பதால், வித்தியாசமாக பின்னணி இசை தரும் முயற்சியில் உள்ளாராம் அனிருத்.

இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "இனிய நண்பர்களுக்கு புடாபெஸ்டில் அனிருத்தை கொண்டு இரண்டாம் உலகம் பின்னணி இசை அமைப்பில் ஈடுபட்டு உள்ளேன். இந்தப் படத்தின் ஒ்வ்வொரு காட்சியிலும் அவரது இசை ரசிகர்களைப் பறக்க வைப்பது போல இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment