நடிகை ரீமா கல்லிங்களுக்கு திருமணம் - இயக்குநர் ஆஷிக் அபுவை மணக்கிறார்!

|

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையும், யுவன் யுவதி தமிழ்ப் படத்தில் நடித்தவருமான ரீமா கல்லிங்கல் காதல் திருமணம் செய்கிறார். முன்னணி மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவை அவர் மணக்கிறார்.

அடுத்த மாதம் இந்தத் திருமணம் நடக்கிறது.

ரீமா கல்லிங்கல் தமிழில் 'யுவன் யுவதி' படத்தில் பரத் ஜோடியாக நடித்தார். ஜீவாவின் 'கோ' படத்திலும் கவுரவ தோற்றத்தில் தோன்றினார்.

நடிகை ரீமா கல்லிங்களுக்கு திருமணம் - இயக்குநர் ஆஷிக் அபுவை மணக்கிறார்!

மலையாளத்தில் முன்னணி நடிகை இவர்.

ரீமா கல்லிங்கலுக்கும் மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவுக்கும் ரொம்ப நாளாகக் காதல் இருந்தது.

ஆஷிக் அபு ஏற்கனவே மம்முட்டியை வைத்து 'டாடி கூல்' என்ற படத்தை இயக்கினார். 'சால்ட் இன் பெப்பர்', '22 பீமெல் கோட்டயம்' போன்ற ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உள்ளார்.

'22 பிமெல் கோட்டயம்' படத்தில் கதாநாயகியாக ரீமா கல்லிங்கல் நடித்தார். அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாம். இந்தத் திருமணம் குறித்து ஆஷிக் அபு கூறுகையில், "ரீமா கல்லிங்கலும் நானும் காதலிப்பது உண்மைதான். படப்பிடிப்பில் தான் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. காதலுக்கு பெற்றோர் சம்மதத்தை பெற காத்து இருந்தோம். இப்போது சம்மதம் கிடைத்து விட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடக்கும்," என்றார்.

ஒப்புக் கொண்டுள்ள படங்களை திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடித்துக் கொடுக்கப் போவதாக ரீமா தெரிவித்துள்ளார்.

 

Post a Comment