"த்ரிஷாவா... இல்ல, இந்தப் படத்துக்கு வேணாம்... இன்னும் நாளானாலும் ஹன்சிகாவுக்காக காத்திருக்கிறேன்" - விக்ரமின் இந்த ஸ்டேட்மென்ட்டைக் கேட்டு கடும் கோபத்தில் உள்ளாராம் த்ரிஷா.
ஒரு நேரத்தில் விக்ரமின் ஆஸ்தான நாயகி எனும் அளவுக்கு தொடர்ந்து படங்கள் செய்தனர். சாமி, பீமா படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்தனர். தனிப்பட்ட முறையிலும் இருவரும் நெருக்கமாக இருந்தனர்.
இப்போது த்ரிஷாவுக்கு கிட்டத்தட்ட புதிய பட வாய்ப்புகளே இல்லாத நிலை. தெலுங்கில் புதிய படங்களில் அவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை.
இந்த நிலையில் முன்பு தனக்கு நெருக்கமாக இருந்த முன்னணி ஹீரோக்களின் படங்களில் இடம்பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் த்ரிஷா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அடுத்து தரணி இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக திரிதரிஷாஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது திரிஷா வேண்டாம் என விக்ரம் கூறிவிட்டாராம்.
இந்த படம் மூலம் தமிழ்பட உலகில் மேலும் வலுவாக காலூன்றலாம் என்றும் நம்பி இருந்த த்ரிஷாவுக்கு இது பெரும் அதிர்ச்சியாகிவட்டதாம்.
விக்ரமுடன் நான் இருந்த இருப்பென்ன.. எங்கள் நட்பென்ன... அத்தனையையும் மறந்து ஹன்சிகா வேண்டும் எனக் கேட்கிறாரே.. இதுதான் நட்புக்கு அழகா என போனில் பொரிந்து தள்ளிவிட்டாராம் த்ரிஷா.
போதாக்குறைக்கு த்ரிஷாவின் அம்மாவும் விக்ரமை போனில் பிடித்து பொரிந்து தள்ளினாராம்.
Post a Comment