இந்திய சர்வதேச திரைப்பட விழாவை துவங்கி வைப்பாரா ரஜினிகாந்த்?

|

இந்திய சர்வதேச திரைப்பட விழாவை துவங்கி வைப்பாரா ரஜினிகாந்த்?

பனாஜி: கோவாவில் நடக்கவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவைத் துவங்கி வைக்க வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. கடந்த ஆண்டு விழாவை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் துவங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ஆண்டு விழா வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி துவங்குகிறது. இந்த விழாவை துவங்கி வைக்குமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விழா ஏற்பாட்டாளரான என்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆப் கோவாவின் துணை தலைவர் விஷ்ணு வாக் கூறுகையில்,

ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம். அவர் தரப்பில் இருந்து ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அவர் இந்த விழாவை துவங்கி வைத்தால் அது கௌரவம். இந்த மாத இறுதி வரை ரஜினியின் ஒப்புதலுக்காக காத்திருப்போம் என்றார்.

ரஜினிகாந்த் விழாவில் கலந்து கொள்வார் என்று விழா ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.

 

Post a Comment