சென்னை: இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் மீது தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடருவேன் என்று நஸ்ரியா நஸீம் அறிவித்துள்ளார்.
படத்தின் டைட்டில் நய்யாண்டி என்றாலும், நடப்பதையெல்லாம் பார்த்தால் வில்லங்கம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.
இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் இருவரையும் ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன் எனக் கிளம்பியுள்ளனர் நஸ்ரியாவும் அவர் தந்தையும்.
நய்யாண்டி படம் தொடங்கும்போதே கவர்ச்சிக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். ஆனால் ஒரு முறை கவர்ச்சியாக ஒரு ஆடை கொடுத்து அணியச் சொன்னாராம் இயக்குநர். உடனே அதை அணிய மறுத்து கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டாராம், மணிக்கணக்கில். பின்னர் தனுஷ் போய் சமாதானம் செய்து கூட்டி வந்தாராம்.
அடுத்த சில தினங்களில்தான் இந்த தொப்புள் விவகாரம் வந்துவிட்டது.
இந்தக் காட்சியை வேறு ஒரு பெண் மற்றும் தனுஷ் போன்ற தோற்றமுடைய ஒருவரை வைத்து எடுத்துவிட்டு, அதை பாடி டபுள் செய்து, ட்ரைலரில் சேர்த்துவிட்டாராம் சற்குணம். இதைக் கேட்கப் போய்தான் இவ்வளவு வில்லங்கமும் வெடித்தது.
நஸ்ரியாவின் தந்தை இதுபற்றி கேட்டபோது, தன் அரசியல் பின்புலத்தைச் சொல்லி சற்குணம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் கதிரேசனும் மிரட்டினாராம்.
இதனால் என் சொத்தே போனாலும் கவலையில்லை, உன்னை ஒரு வழி பண்ணுகிறேன் பார் என்று வரிந்து கட்டிக் கொண்டு இப்போது போலீசுக்குப் போயிருக்கிறார்கள்.
"முதலில் சினிமா அமைப்பில் முறைப்படி புகார் தந்தேன். அங்கே எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதனால்தான் இந்த மோசடியை எதிர்த்து கமிஷனர் அலுவலகத்துக்குப் போக வேண்டியதாயிற்று. நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளேன்," என்கிறார் நஸ்ரியா.
Post a Comment