சென்னை: தனக்கு நெருக்கமானவர்களே தனது பெயரை கெடுப்பதால் நடிகைகளை கலாய்த்து ஓட வைப்பதில் வல்லவரான நடிகர் கவலையில் உள்ளாராம்.
படப்பிடிப்பில் இந்த நடிகர் இருந்தால் அவர் நிச்சயம் மகளிர் கூட்டத்துடன் உட்கார்ந்து அவர்களை கலாய்த்துக் கொண்டிருப்பார் என்பது கோடம்பாக்கத்திற்கே தெரியும். இந்நிலையில் அவருக்கு நெருக்கமானவர்களே அவரது பெயரைக் கெடுக்கும் வகையில் பல விஷயங்களை பேசி வருகிறார்களாம்.
அந்த நடிகரா அவர் எப்பொழுது பார்த்தாலும் நடிகைகளுடன் தான் பேசிக் கொண்டிருப்பார், நடிகைகளுக்கு பிரியாணி விருந்து வைக்கிறார் என்று வெளிப்படையாக பேசி வருகிறார்களாம். இது அந்த நடிகரை மிகவும் கவலை அடைய வைத்துள்ளதாம்.
இப்படிப்பட்ட விமர்சனங்கள் தனது வளர்ச்சியை பாதிக்கும் என்று அஞ்சுகிறாராம். அதனால் இனி மிகவும் எச்சரிக்கையாக இருக்க முடிவு செய்துள்ளாராம். சென்னையில் பிரியாணி ஹோட்டல் வைத்திருக்கும் நடிகர் தற்போது ரியல் எஸ்டேட்டில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment