ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!!!!!!!

|

புதுச்சேரி: நடிகர் ராமராஜனுக்கு புதுவையைச் சேர்ந்த ஒரு அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!!!!!!!

தமிழ் திரையுலகில் எண்பதுகளிலேயே ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்ற சாதனையைச் செய்தவர் ராமராஜன். இவரது கரகாட்டக்காரன் 400 நாட்களுக்கும் மேல் ஓடியது.

சினிமாவில் ஓஹோவென இருந்தவரை அரசியல் வீழ்த்தியது. திடீரென சினிமாவில் காணாமல் போனார்.

புதுவையைச் சேர்ந்த அஸிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு ராமராஜன் உள்பட 80 சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!!!!!!!

இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் புதுச்சேரியில் நடந்தது. விழாவில் ராமராஜன் பங்கேற்றார். அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் விருதினையும் பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கி கவுரவித்தார்.

 

Post a Comment