பாண்டிய நாடு படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த சொந்தத் தயாரிப்பிலும் தனக்கு ஜோடியாக லட்சுமி மேனனையே ஒப்பந்தம் செய்துள்ளார்
இந்தப் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் சமீப காலமாக அவரது காதல் பிரச்சினை, அவரை வைத்து இயக்குபவர்களுக்கு சங்கடங்களை உண்டாக்கி வருவதாக பேச்சு கிளம்பியுள்ளது.
ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துவிட்டு, சிம்புவுடன் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருப்பதைவிட, பாண்டிய நாடு படத்தில் நல்ல ஒத்துழைப்பு தந்த லட்சுமி மேனனே இந்தப் படத்தில் தொடரட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் விஷால்.
இந்தப் படத்தை தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் போன்ற படங்களை இயக்கிய திரு இயக்குகிறார். விஷாலே தயாரிக்கிறார்.
‘மஞ்சப்பை', ‘சிப்பாய்', ‘ஜிகர்தண்டா' உள்ளிட்ட 6 படங்களில் இப்போது லட்சுமி மேனன் நடிக்கிறார். நஸ்ரியா பிரச்சினையால் அவர் நடிக்க வேண்டிய சில படங்களுக்கும் இப்போது லட்சுமியிடம் கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்!
Post a Comment