திமிரு, காளைக்குப் பிறகு தருண்கோபி இயக்கும் சூதாட்டம் - நாயகி சந்தியா

|

திமிரு, காளை படங்களை இயக்கிய தருண்கோபி, சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் சூதாட்டம்.

இந்தப் படத்தில் அவருடன் ரமணா இன்னொரு நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சந்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

திமிரு, காளைக்குப் பிறகு தருண்கோபி இயக்கும் சூதாட்டம் - நாயகி சந்தியா  

திமிரு, காளை என இரண்டு படங்களை இயக்கிய பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய தருண் கோபி, மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் நடிப்பில் அவர் எதிர்ப்பார்த்த மாதிரி ஜொலிக்கவில்லை.

இந்த நிலையில், மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இப்போது சூதாட்டம் என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் தருண் கோபி.

இதில் இன்னொரு நாயகனாக ரமணாவை ஒப்பந்தம் செய்துள்ளார். தொட்டுப் பார், மகான் கணக்கு, வேகம் படங்களில் சிறப்பாக நடித்தும், அதற்கான வெற்றியை ருசிக்காத ரமணா, இந்தப் படத்துக்காக வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். தேவராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.

திமிரு புரொடக்ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரிக்கிறார்.

 

Post a Comment