என் பெயரை மாற்றிக் கொண்ட ராசி காரணமாகவே அஜீத்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக நடிகை மனோசித்ரா கூறியுள்ளார்.
‘அவள் பெயர் தமிழரசி' என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் நந்தகி. தொடர்ந்து ‘தாண்டவக்கோனே' என்ற படத்திலும் நடித்தார்.
ஆனால் அவருக்கு எதிர்ப்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையமில்லை.
எனவே எண் ராசி பார்த்து தன்னுடைய பெயரை ‘மனோசித்ரா' என மாற்றிக் கொண்டார்.
இந்த பெயர் ராசி தற்போது இவருக்கு கைகொடுத்து விட்டதாம். அஜீத் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘வீரம்' படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார் மனோசித்ரா.
இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு காரணமே தன் பெயர் மாற்ற ராசிதான் என்று கூறி வருகிறாராம் நந்தகி எனும் மனோசித்ரா.
வீரம் படத்தில் அஜீத் - தமன்னா நடிக்கிறார்கள். இன்னொரு ஜோடியாகத்தான் விதார்த்தும் மனோசித்ராவும் நடிக்கின்றனர்.
தமன் இசையில், சிவா இயக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. வேட்டி சட்டையில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார் அஜீத்.
Post a Comment