ஸ்ரீதேவியை முகத்தில் துப்பச் சொன்ன ரஜினியை நினைச்சா உடல் சிலிர்க்குது!- பாக்யராஜ் ப்ளாஷ்பேக்

|

சென்னை: காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக தன் முகத்தில் நிஜமாகவே துப்பச் சொன்ன ரஜினியை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது, என்றார் இயக்குநர் கே பாக்யராஜ்.

16 வயதினிலே ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், "பல தடைகளை, விபத்துகளைக் கடந்து வந்து வெளியாகி வெற்றி பெற்ற படம் இது. முத முதல்ல என்பேரு டைட்டில்ல வந்த படமும் இதான்.

இந்தப் படத்தில் நடிச்ச சூப்பர் ஸ்டார் ரஜினி சார், கமல் சாரெல்லாம் பாத்தா, எனக்கு பழைய ஞாபகங்கள் வருது.

ஸ்ரீதேவியை முகத்தில் துப்பச் சொன்ன ரஜினியை நினைச்சா உடல் சிலிர்க்குது!- பாக்யராஜ் ப்ளாஷ்பேக்

16 வயதினிலே படத்தில் ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா நாய் வளக்கல அதுக்கு பதிலா என்னை வளத்தா என்றொரு வசனம் வரும். அதை கமல் உணர்ச்சிகரமாக பேசி முடித்தார். அதை பார்த்த சுற்றி நின்ற படக்குழுவினர் கண்ணீர் விட்டனர்.

இன்னொரு காட்சி.. வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத காட்சி. ரஜினி முகத்தில் ஸ்ரீதேவி காறி துப்ப வேண்டும். சோப்பு நுரை, டூத் பேஸ்ட் என்று எதையெல்லாமோ வைத்து ரஜினி முகத்தில் அடித்தோம். அது சரியாக வரவில்லை. பாரதிராஜா, தவித்தார், நேரம் போய்க்கிட்டிருக்கு.

உடனே ரஜினி எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்க... சும்மா ஸ்ரீதேவியை என் முகத்தில் துப்ப சொல்லுங்க சரியா வரும் என்றார். ஸ்ரீதேவி நிஜமாகவே அவர் முகத்தில் துப்பினார். அதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

ஆனா அந்த நிகழ்ச்சியை இப்போ நினைச்சாலும் என் உடல் சிலிர்க்குது. இவங்கள்லாம் வெறும் நடிகர்கள் இல்லை. சினிமாவுக்காக அன்னிக்கே தங்களை அர்ப்பணிச்சிக்கிட்டவங்க. அதனாலதான் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார்கள்," என்றார்.

 

Post a Comment