கடிமா: தனது வீட்டு வாட்ச்மேனின் மகளுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அறிந்த பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மருத்துவ செலவை தானே ஏற்றார்.
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மும்பை வீட்டில் இரவு நேரத்தில் வாட்ச்மேனாக இருப்பவரின் 12 வயது மகளுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது. மருத்துவ செலவை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று அவர் கவலையில் இருந்தார். வாட்ச்மேனை அழைத்து அவர் ஏன் கவலையாக காணப்படுகிறார் என்பதை கேட்டார் சுனில்.
அவர் தனது மகளுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கடிமாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்தார். உடனே சுனில் மருத்துவச் செலவை தானே ஏற்பதாக தெரிவித்தார்.
டெல்லியில் தனக்கு தெரிந்த நபர் மூலம் கடிமாவில் உள்ள மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரூ.50,000 அனுப்பி வைத்தார். மேலும் எவ்வளவு செலவானாலும் சரி சிறுமியின் உயிர் தான் முக்கியம் என்று சுனில் தெரிவித்ததாக வாட்ச்மேனின் மனைவி துர்கா தேவி தெரிவித்துள்ளார்.
தக்க சமயத்தில் உதவிய சுனிலுக்கு துர்கா தேவி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Post a Comment