விரைவில், 'காக்கி’க்கு மாறப் போகும் காமெடி நடிகர்....

|

சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்த அந்த காமெடி கதாநாயகன் விரைவில் காக்கி அணிந்து பட்டையைக் கிளப்பப் போகிறாராம். படத்தில் அவர் காமெடி போலீசா இல்லை கறார் போலீசா எனத் தெரியவில்லை. ஆனால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தப்படம் முதலில் நடிகரின் காட்பாதரான சுள்ளானுக்குத் தான் வந்ததாம். அவர் தான் தன்னை விட இந்த கதாபாத்திரத்திற்கு காமெடி பொருத்தமாக இருப்பார் என பரிந்துரை செய்தாராம்.

நண்பரும், காட்பாதருமான சுள்ளானின் அறிவுரைப்படி தான் படங்களைத் தேர்வு செய்கிறாராம் காமெடி. திரையுலக நட்பு மட்டுமின்றி குடும்ப விஷயங்களையும் காட்பாதரிடம் பகிர்ந்து கொள்ளும் நடிகர், சமீபத்தில் காதல் மனைவியை விவாகரத்துசெய்யப் போவதாக கிளம்பிய வதந்தியின் போது கூட, மனைவி கையால் சமைத்த விருந்தை காட்பாதருக்கு பரிமாறி, திருமண நாள் ஆசி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment