திரைப்பட இயக்குநர் லிங்குசாமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து ‘ரன்', ‘ஜி', ‘சண்டக்கோழி' பையா, உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
வளசரவாக்கத்தில் இருக்கும் லிங்குசாமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள் பற்றி இதுவரை எந்த தகவலையிலும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
லிங்குசாமி சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் லிங்குசாமி.
இந்த நிறுவனம் மூலம் ‘வழக்கு எண் 18/9', ‘கும்கி' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தார்.
இவர் தற்போது சூர்யா நடிப்பில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். மேலும், கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்', விக்ரம் பிரபு நடிக்கும் ‘இவன் வேற மாதிரி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இயக்குனராக வெற்றிபெற்ற லிங்குசாமி தயாரிப்பாளராகவும் ஜெயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment