சென்னை: தயாரிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், இயக்குநர் என பல முகங்கள் கொண்ட பஞ்சு அருணாச்சலத்துக்கு கவியரசர் கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.
கவியரசர் கண்ணதாசனின் ஆண்டு விழா வரும் சனிக்கிழமை மாலை சென்னையில் நடக்கிறது. இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் தலைமையிலான கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக்கட்டளை 10வது ஆண்டாக இந்த விழாவை நடத்துகிறது.
விழாவை டாக்டர் குமாரராணி மீனா முத்தையா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.
எம்எஸ் விஸ்வநாதன் வரவேற்றுப் பேசுகிறார். தயாரிப்பாளர் எம் சரவணன், நல்லி குப்புசாமி செட்டியார், எம் முரளி ஆகியோர் விருந்தினர்களை வரவேற்று மரியாதை செய்கின்றனர்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், இயக்குநர் என பல முகங்கள் கொண்டவரும் கவியரசரின் நெருங்கிய உறவினருமான பஞ்சு அருணாச்சலத்துக்கு கவியரசர் விருது வழங்கப்படுகிறது. அரசு நாச்சியப்பன் அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
விருது பெறும் இந்த இருவரையும் அறிமுகப்படுத்திப் பேசுகிறார் இயக்குநர் எஸ்பி முத்துராமன்.
விருதுகளை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார் தமிழறிஞர் அவ்வை நடராஜன்.
தமிழருவி மணியன் சிறப்புரையாற்றுகிறார்.
ஏசி சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
Post a Comment