கவுதம் மேனனும் லட்சுமி மேனனும்...

|

எதும் கிசுகிசு மேட்டர் இல்லீங்க... இது லட்சுமி மேனனை கவுதம் மேனன் ஒப்பந்தம் செய்திருப்பது குறித்து.

மிகுந்த சரிவிலிருந்த கவுதம் மேனனை கை கொடுத்து அஜீத் தூக்கி இருப்பது தெரிந்த விஷயம்.

அந்த தெம்பில், ஒரு புதிய படத்தைத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார் கவுதம் மேனன்.

கவுதம் மேனனும் லட்சுமி மேனனும்...

வீரம் படம் முடிந்து கவுதம் மேனன் படத்தில் அஜீத் நடிக்க குறைந்தது 3 மாதங்களாவது ஆகுமாம். பிப்ரவரியில் ஷூட்டிங் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த இடைவெளியில் சிம்புவை வைத்துப் படம்பண்ணுவதாக முதலில் முடிவு செய்திருந்தார் கவுதம். ஆனால் சிம்பு படத்தை 2014-ல் வைத்துக் கொள்ள முடிவு செய்த கவுதம், அந்த 3 மாதங்களில் ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் ராதாமோகன். இந்த படத்தில் யார் ஹீரோ என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஹீரோயினாக லட்சுமி மேனனைத் தேர்வு செய்துள்ளனர்.

லட்சுமி மேனனை இப்படத்திற்காக சிபாரிசு செய்தது கவுதம் மேனன்தானாம். இவருடைய விருப்பத்தை மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளாராம் ராதாமோகன்.

 

Post a Comment