அறியாமை, அரசியல் போன்றவைதான் விஸ்வரூபம் எதிர்ப்புகளுக்கு காரணம்! - கமல்

|

அறியாமை, அரசியல் போன்றவைதான் விஸ்வரூபம் எதிர்ப்புகளுக்கு காரணம்! - கமல்

சென்னை: அறியாமை, அரசியல் போன்றவைதான் விஸ்வரூபத்துக்கு வந்த எதிர்ப்புகளுக்குக் காரணம், என்று நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படத்தை எடுத்து, பெரும் தடைகளுக்குப் பிறகு வெளியிட்டார் கமல். அந்த தடைகள், எதிர்ப்புகளே அப்படத்துக்கு பெரும் விளம்பரங்களாகவும் அமைந்தன.

இந்த நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளார் கமல்.

இப்படத்துக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவேன் என கமலும் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் 2-ம் பாகத்துக்கும் பெரிய எதிர்ப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கிறீர்களா என அவரிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், "விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும்.

இந்த படம் பணத்தையும் பாராட்டையும் அள்ளித் தரும் என் நம்பிக்கை உள்ளது. விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அறியாமை, அரசியல், போன்ற காரணங்களால் அவை நிகழ்ந்தன.

அந்த அனுபவங்களில் இருந்து இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்த முறை சர்ச்சைகள் இருக்காது. அறிவுப்பூர்வமாக அணுகுவார்கள் என நம்புகிறேன்," என்றார்.

 

Post a Comment