சென்னை: தமிழ் சினிமாவில் ரொம்ப டிசிப்ளின்டு லேடின்னா அது குஷ்புதான் என்றார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
விஷால் நடித்து தயாரித்துள்ள பாண்டிய நாடு படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பேசுகையில், "விஷால் இன்னிக்கு இருக்கிற ஹீரோக்கள்ல ரொம்ப திறமையானவர். தன் ஆரம்ப நாட்கள்லேயே தன் படத்துக்கு திமிருன்னு பெயர் வச்சவர் அவர். திறமைக்கேற்ற திமிர்தான் அவருக்கு உள்ளது. அதுதான் அவரை சினிமாவில் ஜெயிக்க வச்சிருக்கு.
விஷால் ரொம்ப போராடி தன் இடத்தை தக்க வச்சிருக்கார். அவர் குடும்பம் முழுவதுமே சினிமாவை தொழிலாகக் கொண்டவர்கள். அதனால்தான் விஷாலுக்கு பக்க பலமா இருக்காங்க.
தன் சொந்தப் பணத்தை தயாரிப்பில் போட்டு தன் திறமையை நிரூபிக்க களமிறங்கியிருக்கிறார். அவர் இந்தப் படத்துல ஜெயிக்கணும்...
இந்த தீபாவளியைப் பொறுத்த வரை எனக்கு சின்ன உறுத்தல் என்னன்னா, தியேட்டர்கள் பிரச்சினைதான்.
இந்த தீபாவளிக்கு பாண்டியநாடு, ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய 3 படங்கள் ரிலீஸாகுது. இதுல ஆரம்பம் படத்தோட தயாரிப்பாளர் ஏம்.எம் ரத்னம்கிட்ட அவர் படத்தை 2 வாரம் தள்ளி ரிலீஸ் பண்ணலாமேன்னு சொன்னேன். அப்போதான் அவங்க எதிர்ப்பார்க்கிற தியேட்டர் கிடைக்கும். ஆனா இப்போ இருக்கிற சூழ்நிலையில அது முடியாதுன்னு எனக்கும் புரியுது.
ஒருகாலத்துல தமிழ்நாட்டுல 2800 தியேட்டர்கள் இருந்தது, இப்போ வெறும் 1043 தியேட்டர்கள் தான் இருக்கு. அதிலேயும் 320 மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களாகிடுச்சி.
மத்ததெல்லாம் சிங்கிள் ஸ்கிரீன்ஸ். இப்போ வெளியாகிற இந்த மூணு படங்களுமே பெரிய படங்கள். மூணு படங்களுமே சக்சஸ் ஆகணும். இதுதான் எல்லாரோட ஆசை. ஆனா தியேட்டர்கள் கம்மியா இருக்கிற இந்த சூழ்நிலையில மூணு படங்களுமே வெளியாவது கொஞ்சம் சங்கடமாகத்தான் உள்ளது.
குஷ்பு..
இந்த விழாவில் குஷ்புவைப் பார்த்ததும், அவங்களைப் பத்தி சில விஷயங்கள் சொல்ல ஆசைப்பட்டேன். சினிமா இன்டஸ்ட்ரில ஒரு டிசிப்ளின் லேடின்னா குஷ்புவைத்தான் சொல்வேன்.
ஏன்னா அவங்களுக்கு லோ பி.பி இருக்கு. நான் அவங்களை வெச்சு 6 படங்கள் டைரக்ட் பண்ணியிருக்கேன். பி பி. நேரத்தில் அவங்க சோர்வா படுத்திருப்பாங்க. ஆனா ஷாட் ரெடின்னு சொன்ன உடனே கேமாராவுக்கு முன்னால வந்து நின்னுடுவாங்க.
அதேமாதிரி அவங்க நடிக்கிற படமா இருந்தாலும் சரி, இல்லாத படமா இருந்தாலும் சரி, ஃபங்ஷன்னு கூப்பிட்டா கண்டிப்பாக வந்திடுவாங்க. அதான் அவங்க கமிட்மென்ட். புது நடிகைகள் அவங்ககிட்ட இதை கத்துக்கணும்," என்றார்.
Post a Comment