ரகசிய திருமணமா...? அதெல்லாம் இல்லீங்க - மறுக்கும் சமந்தா

|

சென்னை: தனக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டதாக வந்த செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார் நடிகை சமந்தா.

சித்தார்த்துக்கும், சமந்தாவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின.

இருவரும் கோயில்களில் ஜோடியாக பூஜை செய்யும் படங்களும் அடிக்கடி வெளியாகின்றன.

ரகசிய திருமணமா...? அதெல்லாம் இல்லீங்க - மறுக்கும் சமந்தா

ஆனால் இதையெல்லாம் மறுக்கிறார் சமந்தா.

அவர் கூறுகையில், "என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய வதந்திகள் வருகின்றன. எனக்கு திருமணமாகி, தனிக்குடித்தனம் நடத்துவதாகவெல்லாம் கூறுகிறார்கள்.

இது உண்மையல்ல. நான் ஏன் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

என் திருமணம் இப்போது இல்லை. ஆனால் எப்போது நடந்தாலும் வெளிப்படையாகவே நடக்கும்.

அடுத்த ஆண்டு முழுவதையும் தமிழ்ப் படங்களுக்குதான் ஒதுக்கியுள்ளேன். என் பாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். நல்ல கதையோடு வருபவர்களிடம் சம்பளம் பற்றிக் கூட கவலைப்படாமல் கால்ஷீட் தரத் தயாராக உள்ளேன்," என்றார்.

 

Post a Comment